நீர்கொழும்பு – லியனகேமுல்ல பிரதேசத்தில் 17 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
யுவதியின் தந்தையினால் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயத்திரி தேவ்ஷானி சூரியசிங்க என்ற யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார் எனவும், இவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்ததுடன் குறித்த யுவதி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நீர்கொழும்பு பொலிஸ் – 071-8 591 630 நீர்கொழும்பு பொலிஸ் – 031- 2 222 227
Follow on social media