முல்லைத்தீவில் 16 வயது மாணவனின் விபரீத முடிவு – போதைப்பொருளுக்கு அடிமை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

முல்லைத்தீவில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 16 அகவையுடைய மாணவன் தவறான முடிவு எடுத்து உயிரினை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றையதினம் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

10ஆம் வட்டாரத்தில் வசிக்கும் 16 அகவையுடை குறித்த மாணவன் ஜஸ்போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்.

இந்த நிலையில் இவரை வீட்டில் பெற்றோர்கள் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார்கள் இந்நிலையில் வீட்டில் இருந்த மாணவன் ஐஸ் போதைப்பொருளினை உட்கொண்டு தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்தவரின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவந்து பிரேத பரிசோதனைகளில் குறித்த மாணவன் ஐஸ் போதைப்பொருள் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழர் பகுதிகளில் இளையோர் மத்தியில் போதைப்பொருள் பாவதை அதிகரித்து வருகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதோடு போதைப்பொருள் பாவனையாள் இவ்வாறான உயிரிழப்பும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றன. அந்தவகையில் கடந்தவாரம் யாழ் தீவு பகுதியில் இளைஞர் ஒருவர் ஐஸ் போதைபொருளால் உயிரிழந்த நிலையில், தமிழர் பகுதிகளில் தொடர் இழப்புக்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply