அம்பாறை கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்று வருகின்ற ட்ரெவிஷ் தக்சிதன் (15 வயது) சிறுவன் பாடசாலையின் பிரத்தியேக வகுப்புக்கு சென்ற நிலையில் 07 ம் திகதி காணாமல் போயுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த சிறுவன் கடந்த 7 ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்ற பிரத்தியேக வகுப்புக்கு சென்ற சிறுவன் பகல் 1.30 மணியளவில் வகுப்பிலிருந்து பிஸ்கட் வாங்க கடைக்கு சென்றதாக நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுவனின் உயரம் 4 அடி 5 அங்குலம் உடையவர் என்பதுடன் சிறுவன், காணாமல் போகும் போது கார்மேல் பற்றிமா கல்லூரியின் பெயர் பொறிக்கப்பட்ட நீல நிற ரீசேட் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தகவல்கள் தெரிந்தவர் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
0773609218, 0776510154, 0772309254, 0754389097, 0778420916, 0672220179
Follow on social media