யாழில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய 12 வயதான சிறுமி ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 12 வயது சிறுமி ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டாரால் காப்பாற்றப்பட்டு, சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு , சிறுமி உடல்நலம் தேறிய பின்னர் , சிறுமிக்கு உளவள சிகிச்சை அளித்த போது, தனக்கு 21 வயதுடைய இளைஞன் ஒருவர் தொலைபேசி குறுந்தகவல்கள் ஊடாக ஆபாச குருஞ்செய்திகளை அனுப்புவதாகவும்,

தவறான தொடுகைகள் மூலம் பாலியல் தொந்தரவு தந்ததலும் , தான் கடும் விரக்தியடைந்ததால் உயிர் மாய்க்க முயன்றதாக தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து வைத்தியசாலை ஊடாக ஊர்காவற்துறை பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Follow on social media
CALL NOW

Leave a Reply