காலிஸ்தான் உறுப்பினரான நிஜ்ஜார், சர்ரே நகரில் குருத்வாரா ஒன்றிற்கு வெளியே 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சுட்டு கொல்லப்பட்டார்.
இச் சம்பவத்தில் இந்தியாவுக்கு உள்ள தொடர்பு பற்றி நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகளுக்கான சான்றுகள் தன்னிடம் உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜஸ்டின் ட்ருடோ கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் இந்தியா மறுத்தது. இதைத்தொடர்ந்து, இந்தியா மற்றும் கனடா இடையேயான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், கனடாவில் இந்திய அரசின் வன்முறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்திய தூதர்கள் பணியாற்றினர் என்பதற்கான சான்றுகளை கனடா பொலிஸார் சேகரித்து உள்ளனர் என கனடா குற்றச்சாட்டை தெரிவித்தது.
இந்நிலையில், கனடாவில் உள்ள இந்திய தூதர்கள் 6 பேரை அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ளது. இதனால் கனடா மற்றும் இந்தியா இடையே தூதரக அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow on social media