ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம்.
இந்தியாவில் 2021-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட முதல் 10 திரைப்படங்கள் பட்டியலை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் சூர்யா நடித்த ஜெய்பீம் முதல் இடம் பிடித்துள்ளது.
ஜெய்பீம் போலீஸ் சித்ரவதையில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் படமாக வந்தது.
இந்த படத்தை ஞானவேல் இயக்கி இருந்தார்.
இதில் சூர்யா வழக்கறிஞராக நடித்து இருந்தார். படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக பா.ம.க, பா.ஜனதா கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media