தனியார் பஸ் ஒன்றில் பயணித்த 18 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின்பேரில் பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கித்துல்கல பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையின் பின்னர் சீத்தாவகபுர பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் குறித்த பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ருவன்வெல்ல நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தத் துன்புறுத்தல் குறித்து மாணவி பஸ் நடத்துனரிடம் தெரிவித்ததையடுத்து, நடத்துனர் மாணவியிடம் அவரது தந்தையின் கைத்தொலைபேசி இலக்கத்ததை பெற்று சம்பவம் தொடர்பில் கூறியதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
Follow on social media