சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் “எதிர்நீச்சல்” சீரியலில் ஆதிகுணசேகரன் என்ற கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் “மாரிமுத்து”. இந்த சீரியலில் “யம்மா ஏய்” என்ற டைலாக்கின் மூலம் மக்களிடையே பேமஸ் ஆனார்.
சீரியலில் நடிப்பதற்கு முன்பே பல படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார். “பரியேறும் பெருமாள்” படத்தின் மூலம் பிரபலமானார். சமீபத்தில் ரிலீஸ் ஆன ஜெய்லர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 8.30 மணியளவில் “எதிர்நீச்சல்” சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து திடிரென மயங்கி விழுந்தார்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த செய்தி வைரலானதும் பல திரையுலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
Follow on social media