கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரச பேருந்தொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (01) அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு ஹட்டன் பிரதான வீதியின் வட்டவளை சிங்களக் பாடசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
எதிர்திசையில் இருந்து வந்த பேரூந்து ஒன்றுக்கு வழிவிட முற்பட்ட போது பேருந்து வீதியை விட்டு வழுக்கி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த 18 பேர் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், படுகாயமடைந்த 5 பேர் ஆபத்தான நிலையில் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்த ஏனையவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வட்டவளை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 100 பேர் பயணித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
Follow on social media