கொழும்பு – பேலியகொட மெனிக் சந்தையின் வியாபாரிகள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேலியகொட மெனிக் சந்தையில் அமைந்துள்ள கடைகளை வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (26) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தபோதும் வியாபாரிகள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வியாபார சம்மேளனத்தின் தலைவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்காக பல காவல்துறையினர் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media