விக்னேஸ்வரனை சந்தித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க பேச்சு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

13ஆவது திருத்தச் சட்டத்தினை அதிபர் ரணில் விக்ரமசிங்க நடைமுறைப்படுத்தியே தீருவார். அந்த நிலைப்பாட்டில் அவர் உறுதியுடன் உள்ளார். காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் தமிழர் தரப்புடன் கலந்துரையாடிய பின்பு அதிபர் முடிவெடுப்பார் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான நிதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை சட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பில் நேற்று(24) விக்னேஸ்வரனை சந்தித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க பேச்சு நடத்தியுள்ளார்.

நேற்றைய சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில், விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

அடுத்த வருடம் முதலில் அதிபர் தேர்தலை நடத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கும் மூன்றாவதாக மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் அதிபர் தேர்தலை நடத்துவதற்கு தான் அவர் திட்டமிடுகிறார்” – என்றார்.

அதிபரின் அழைப்பின் பேரில் நேற்று மாலை 6 மணி முதல் முக்கால் மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் பலதரப்பட்ட விடயங்கள் பேசப்பட்டதாக அறிய முடிகிறது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting