இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (06) கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் “22 கரட்” தங்கத்தின் விலை 148,000 ரூபாவாக குறைந்துள்ளது.
நேற்றைய தினம் இதன் விலை 149,000 ரூபாவாக காண்பட்டது.
இதேவேளை, 161,000 ரூபாவாக காணப்பட்ட “24 கரட்” தங்க பவுனின் விலை இன்றைய தினம் 160,000 ரூபாவாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Follow on social media