பாடசாலை கிரிக்கட் போட்டியின் (Big Match) போது, இடம்பெற்ற வாகன கண்காட்சியில் ஏற்பட்ட விபத்தில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஜீப் ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் உள்ள புதிய மைதானத்தில் இன்று (01) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த மாணவர்களில் இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Follow on social media