2022/23 பெரும்போகத்தில் ‘அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பு அகற்றல்’ நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசமாக அரிசி வழங்கும் நிகழ்ச்சி திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசாங்கத்தின் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இன்று நாடெங்கும் உத்தியோகபூர்வமாக காலை 10:30 மணிக்கு ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அதே வேளை நாட்டின் சகல மாவட்டங்களிலும் மாவட்ட மட்டத்திலான இந்த நிகழ்வு இடம்பெற்றது .
மன்னார் மாவட்டத்தின் முதல் நிகழ்வாக நானாட்டான் பிரதேசத்தில் பரிகாரி கண்டல் கிராம அலுவலர் பிரிவில் உள்ள சிறுக்கண்டல் கிராமத்தில் கிராம அலுவலர் தலைமையில் இடம்பெற்றது.
அதன் போது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல், மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், நானாட்டான் பிரதேச செயலாளர், நானாட்டான் உதவிப் பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தெரிவுசெய்யப்பட்ட வருமானம் குறைந்த பயணாளிகளுக்கு அரிசி பொதிகளை வழங்கி வைத்தனர்.
Follow on social media