போகொட – ஹலம்ப வீதியின் ஊடாக ஓடும் ஓடையைக் கடக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
நேற்று (23.03.2023) மாலை பெய்த கனமழையுடன் வந்த வெள்ளத்தில் சிக்கியே இரண்டு பிள்ளைகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பிள்ளைகளை கண்டுபிடிக்க நடவடிக்கை
ஹாலியால பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகொட கிராமத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதன்போது 10 வயதுடைய யசிது உமேஸ் சத்சர (சகோதரன்) மற்றும் 08 வயதுடைய தஸ்மி நதிகா (சகோதரி) ஆகியோர் கூலி வேலைக்குச் சென்ற தமது தாயாரைப் பார்க்க சென்ற போதே இவ்விபத்தை எதிர்கொண்டுள்ளனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிள்ளைகளை கண்டுபிடிக்க கிராம மக்களுடன் இணைந்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow on social media