உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கேகாலை-எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு நெற்று தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் நடந்து சென்ற நபர் ஒருவர், சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்துப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், சடலம் கரவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Follow on social media