மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இன்று (11) காலை பனாமுர கெம்பனே பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ராஜா தயானந்த என்ற 50 வயது நபர் தனது பிள்ளையை பாடசாலையில் விட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுடப்பட்டார்.
கெம்பனே அலுத் வீதி பகுதியில் பாழடைந்த இரண்டு வீடுகளுக்கு அருகிலுள்ள வளைவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பனாமுர பொலிஸார், துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Follow on social media