சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவாசல் காட்டுக்கொட்டாயை சேர்ந்த சிறுமி அவர்.. 17 வயதுதான் ஆகிறது.. பிளஸ்௨ படித்து வருகிறார்.. இவருக்கு தினேஷ்குமார் என்பவர் பேஸ்புக்கில் அறிமுகமாகி உள்ளார்.
ஆத்தூர் வளையமாதேவியை சேர்ந்தவர் தினேஷ்குமார்.. 24 வயதாகிறது.. இந்நிலையில், மாணவியிடம், ஒருமுறை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.. அதன்படியே மாணவியும் தினேஷை தேடி வந்தார். அப்போது, மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை சொல்லியிருக்கிறார்..
ஒருகட்டத்தில் வீட்டை விட்டு வந்துவிடும்படியும், திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் தினேஷ்குமார் சொல்லி உள்ளார்.. இதை நம்பி அந்த சிறுமியும், கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி வீட்டில் இருந்து மாயமானார்… பிள்ளையை காணாமல், அவரது பெற்றோர், ஆத்தூர் ரூரல் போலீசில் புகார் தந்தனர்.. மேலும், தங்கள் மகளை தினேஷ்குமார்தான் கடத்தி சென்றுவிட்டதாகவும், கூறியிருந்தனர்.
இதையடுத்து, போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து சிறுமியையும், தினேஷ்குமாரையும் தேடி வந்தனர்.. இறுதியில், கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி சிறுமியை மட்டும் போலீசார் மீட்டனர்.. பின்னர் அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.. அப்போது சிறுமி சொன்ன விஷயத்தை கேட்டு போலீசார் அதிர்ந்து போனார்கள்.. திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று, தினேஷ்குமார், வண்டலூரில் உள்ள நண்பர்களின் உதவியை நாடினாராம்.. அவர்களும் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.. ஆனால் அப்போதுதான், சிறுமிக்கு 17 வயதாகிறது என்ற விஷயமே தெரியவந்துள்ளது.
இது சட்டப்படி குற்றம் என்பதால், திருமணத்துக்கு உதவ மறுத்துவிட்டார்களாம்.. அதனால், மறுபடியும் சிறுமியை ஆத்தூருக்கு சென்னை-சேலம் தனியார் சொகுசு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்… அப்போது பஸ்ஸில் சிறுமியுடன் தினேஷ்குமாரும் வந்துள்ளார்.. இருவருமே ஸ்லீப்பர் கோச்சில், ஸ்கிரீனால் மூடப்பட்ட படுக்கையில் வந்துள்ளனர்… உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் பஸ் வந்தபோது, டிராபிக் ஜாம் ஆகிவிட்டது.. அதனால், ரொம்ப நேரம் பஸ் அங்கேயே நின்றுள்ளது… அந்த நேரத்தில்தான், சிறுமியை பஸ்ஸிலேயே தினேஷ்குமார் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
அதற்கு பிறகு, சிறுமியை வீட்டிற்கு அருகில் கொண்டு வந்து விட்டுவிட்டு, உடனே தப்பி சென்று விட்டாராம்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, தினேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் வளையமாதேவி பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தபோது, தினேஷ்குமார் வசமாக சிக்கினார்.. அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.. படிக்கின்ற வயதில், சோஷியல் மீடியாவில் எந்நேரமும் நேரத்தை செலவிட்டு, புத்தியையும் தடுமாற செய்தால், வாழ்க்கையே தடம்புரளும் அபாயம் சூழ்ந்துவிடுகிறது..!!!
Follow on social media