நியூயோர்க்கில் அவசர நிலை பிரகடனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

போலியோ நோய் காரணமாக நியூயோர்க் மாநிலத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கழிவுநீர் மாதிரிகளில் போலியோ வைரஸ் கலந்திருந்ததால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, போலியோவுக்கு எதிரான தடுப்பூசியை அதிகரிக்க நியூயோர்க் அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போலியோ பரவுவதைக் கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போடுவது கட்டாயம் என்று நியூயோர்க் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

எனினும், ஏற்கனவே தடுப்பூசி போட்ட ஒருவர், போலியோவால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருந்தால், அவர்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting