மட்டக்களப்பு நகரில் வீதியில் இருந்து சடலம் மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மட்டக்களப்பு நகர் லொயிஸ் அவனியூர் வீதியில் அடையாளம் காணப்படாத நிலையில் நேற்று (11) மாலை ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியில் மதுபானசாலை ஒன்றிற்கு ஆருகில் வீதி ஓரத்தில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிசாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதையடுத்து சம்பவ தினமான நேற்று மாலை மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பொறுப்பதிகாரி பி.கே. ஹெட்டியாராச்சி தலைமையிலான பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டு தடயவியல் பிரிவு பொலிசாரை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர் தொடர்பான அடையாளம் தெரிந்தவர்கள் உடன் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting