உலகின் மிகப்பெரிய மிதக்கும் உணவு விடுதி கடலில் கவிழ்ந்து விபத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஹொங்கொங்கில் இயங்கிவந்த உலகின் மிகப் பெரிய மிதக்கும் உணவு விடுதி, தென் சீனக் கடலில் மூழ்கியுள்ளது.

ஜம்போ புளோட்டிங் ரெஸ்டோரண்ட் (Jumbo Floating Restaurant) எனும் இந்த உணவு விடுதி 46 வருடங்கள் பழைமையானதாகும்.

80 மீற்றர் (260 அடி) நீளமும் 4200 சதுரமீற்றர் பரப்பளவும் கொண்ட இந்த மிதக்கும் உணவு விடுதி, 3 மாடிகளைக் கொண்டது.

ஹொங்கொங்கின் உள்ளூர் மக்களையும் உல்லாசப் பயணிகளையும் கவரும் பிரதான அம்சங்களில் ஒன்றாக இந்த உணவு விடுதி விளங்கியது.

எனினும் பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதற்காகவும், புனரமைப்பதற்காகவும் ஹொங்கொங்கிலிருந்து இந்த மிதக்கும் உணவகத்தை அப்புறப்படுத்துவற்கு அதன் நிர்வாகம் தீர்மானித்தது.

இந்நிலையில், தென் சீனக் கடலின் பராசல் தீவுகளுக்கு அருகில் செல்லும்போது இந்த உணவு விடுதி கவிழ்ந்தது.

இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting