4 காதுகளை கொண்ட அதிசய பூனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

துருக்கியில் 4 காதுகளுடன் காணப்படும் அதிசய பூனையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ரஷ்யன் புளு வகையை சேர்ந்த இந்த பூனையை கேனி டோஸ்மெஸி என்ற பெண்மணி தனது நண்பரின் தோட்டத்தில் கண்டெடுத்தார்.

அது நான்கு காதுகளுடன் இருப்பதை கண்ட அவர் அதற்கு மிடாஸ் என்று பெயரிட்டு தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.

இதன்போது நான்கு காதுகள் இருப்பதால் ஏதோ சூப்பர் பவர் கேட்கும் திறன் அந்த பூனைக்கு இருப்பதாக யாரும் கருதவேண்டாம் என்றும் மற்ற பூனைகளை போலவே அது நார்மலாக நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கேனி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting