மர்மமான முறையில் உயிரிழந்த 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் வனப்பகுதி ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் நிராவிய தேக்குமர வனப்பகுதியில் இருந்து சடலம் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இளைஞனின் உடலில் வெட்டுக்காயங்கள் மற்றும் தீக்காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் தேவனம்பியதிஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (23) இரவு 11.30 மணி வரை குறித்த இளைஞன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை வீட்டில் வாலிபர் இல்லாததால் உறவினர்கள் பிரதேசத்தில் உள்ள தேவாலயத்திற்கு சென்று தேடியுள்ளனர்.
அவர் அங்கு இல்லாததால் அநுராதபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எரிந்து உயிரிழந்த இளைஞனின் சடலத்திற்கு அருகில் இருந்து அவரது கைத்தொலைபேசி மற்றும் லைட்டர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உபகரணங்கள் எதுவும் எரியவில்லை என்பதுடன், அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow on social media