20 நிமிடத்திற்கு 9 கோடி ரூபா சம்பளம் வாங்கிய ஆலியா பட்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஆர்.ஆர்.ஆர். படத்தில் வெறும் 20 நிமிடங்கள் நடித்ததற்காக ஆலியா பட் பெரும் தொகை சம்பளம் பெற்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரமாண்டத்திற்கு பெயர்போன ராஜமவுலி இயக்கியிருக்கும் படம் ஆர்.ஆர்.ஆர். பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆர்.ஆர். ஆர். படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், பாலிவுட் நடிகை ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

கொரோனாவின் மூன்றாவது அலை தீவிரமடைந்திருப்பதால் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிக்க அஜய் தேவ்கன், ஆலியாவுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

அஜய் தேவ்கனுக்கு ரூ.35 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறார்களாம். படத்தில் அவர் வெறும் 15 நிமிடங்களே வருவாராம். 15 நிமிடத்திற்கு ரூ.35 கோடியா என்று சினிமா ரசிகர்கள் வியக்கிறார்கள்.

மேலும் ஆலியா வெறும் 20 நிமிடம் தான் வருவாராம். அதற்காக அவருக்கு ரூ.9 கோடி சம்பளம் கொடுத்திருக்கிறார்களாம். பாலிவுட்டில் இருந்து வந்திருப்பதால் தான் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்திருக்கிறார்கள்.

அதே கதாபாத்திரத்தில் தென்னிந்திய நடிகரும், நடிகையும் நடித்திருந்தால் இவ்வளவு பெரிய தொகை கிடைத்திருக்காது என்று விமர்சனம் எழுந்துள்ளது.

தெலுங்கு படங்களில் பிற மொழி நடிகைகளுக்கு தான் அதிக சம்பளம் கொடுக்கப்படுவதாக ஏற்கனவே புகார் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting