லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு ஜெப்னா கிங்ஸ் அணி நேற்று (21) தகுதி பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற போட்டியில் தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜெப்னா கிங்ஸ் அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜெப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
ஜெப்னா அணி சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ 64 பந்துகளில் 4 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
ரஹ்மானுல்லா குர்பாஸ் 70 ஓட்டங்களை எடுத்தார்.
பந்து வீச்சில் லஹிரு சமரகோன் 2 விக்கெட்டுக்களையும், மெர்ச்சன்ட் டி லாங்கே மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
211 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணி சார்பாக சாமிக்க கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
Follow on social media