9 வயது மகளை தாயின் கண் முன்னே சீரழித்த தந்தை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வெயாங்கொடை பலபோவ பிரதேசத்தில் பெற்ற மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கிய தந்தை வெயாங்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வீட்டின் ஒரே மகளான 9 வயது சிறுமியே இவ்வாறு தந்தையால் சீரழிப்பட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி கைதான சந்தேகநபர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி, தனது தந்தை தாயுடன் ஒரே அறையில் ஒரே படுக்கையில் உறங்குவது தெரிய வந்தது.

இந்த சமயத்தில் சிறுமி தந்தையால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியபோதும்,. கணவனின் மிரட்டலுக்கு அஞ்சி தாயார், அதனை வெளியில் சொல்லாது இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சிறுமியின் கல்வியில் மிகவும் பலவீனமாக இருந்ததால், அதற்கான காரணத்தை அறிய தாய், சிறுமியை மருத்துவரிடம் பரிந்துரைத்த போது, ​​சிறுமி நடந்த சம்பவத்தை மருத்துவரிடம் கூறியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் வைத்தியர் வெயாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாகப்வும் கூறப்படுகின்றது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting