ஆயுதங்களுடன் ஹோட்டலில் சிக்கிய 8 இளைஞர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இளைஞர்கள் 8 பேர் கொழும்பு – ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வைத்து நேற்று (07) குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு கோடி ரூபா பெறுமதியான பணம் மற்றும் துப்பாக்கியுடன் அவர்கள் கது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மஹரகம, கந்தானை பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் குறித்த ஹோட்டலில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டதை குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (08) ஆஜர்ப்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply