இரு குடும்பத்தினர் இடையே மோதல் – படுகாயமடைந்த இருவர் உட்பட 8 பேர் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அஹுங்கல்ல பத்திராஜகம பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் அசிட் வீச்சு மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த மோதலில் இரு குழுக்களின் பணியாளர்களும் காயமடைந்துள்ளதுடன் 4 பெண்களும் காயமடைந்துள்ளனர்.

ஒரு தரப்பினரின் வாள்வெட்டுத் தாக்குதலில் மற்றைய தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், மற்றைய தரப்பினரின் அசிட் வீச்சு மற்றும் தாக்குதல்களால் ஒரு குழுவினர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாக இரு அயல் வீடுகளுக்கு இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் மகன் மற்றும் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

காயமடைந்தவர்கள் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Follow on social media
CALL NOW Premium Web Hosting