காசா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் அந்த நகரில் சுகாதார சேவைகள் முற்றிலும் முடங்கிப்போயுள்ளது என பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
“அடுத்தடுத்த தாக்குதல்கள் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் மருந்துகள் பற்றாக்குறை காரணமாக காசாவில் மருத்துவ சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 344 குழந்தைகள் உட்பட 756 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவசர உதவிகளை கோரி வருகிறோம் ஆனால், சர்வதேச நாடுகள் எங்கள் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Follow on social media