06 மாவட்டங்களைச் சேர்ந்த 7,181 பேர் பாதிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாட்டில், வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணகளில் ஆறு மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால், 06 மாவட்டங்களில் 2,256 குடும்பங்களைச் சேர்ந்த 7,181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் அநுராதபுர மாவட்டங்களே பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ள முகாமைத்துவ மத்திய நிலையம், இதனால், 32 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 490 பேர், தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting