அத்துமீறி மீன் பிடி – 7 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று (20) கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 07 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று (21) மாலை உத்தரவிட்டார்.

நேற்று இரவு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து 2 படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமில் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களை இன்று மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை முன்னெடுத்த மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply