இலங்கையில் நடிகையை ஏமாற்றி 65 இலட்சம் ரூபா மோசடி – இளைஞன் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பேஸ்புக் ஊடாக சிங்கள நடிகையொருவருடன் நட்பை ஏற்படுத்தி திருமணம் செய்வதாக உறுதியளித்து நடிகையொருவரிடமிருந்து 65 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உ0த்தரவிட்டது.

இந்த சந்தேக நபர் கொழும்பு மற்றும் கம்பஹா நீதிமன்றங்களில் கடமையாற்றும் இரண்டு கனிஷ்ட சட்டத்தரணிகளை திருமணம் செய்து கொள்வதாக கூறி 99 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் என நீதிமன்றில் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நடிகை தொடர்பான வழக்கில் சந்தேகநபர் மஹர சிறைச்சாலையின அதிகாரிகளால் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர், இரத்தினபுரி, கஹவத்தையைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மினுவாங்கொடை, பட்டதுவன பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய நடிகையொருவரிடம் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தன்னை சமூக நல ஆர்வலர் எனக் கூறி இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கொழும்பு நீதிமன்றில் கடமையாற்றும் சட்டத்தரணி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து 55 இலட்சம் ரூபாவும், கம்பஹா நீதிமன்றின் சட்டத்தரணி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 49 இலட்சம் ரூபாவும் மோசடி செய்த குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply