அம்பாறையில் இருந்து இன்றைய தினம் (21-03-2023) வெல்லவாய – எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றவர்களில் 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இவ்வாறான நிலையில் குறித்த நான்கு இளைஞர்களும் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
இன்றையதினம் அதிகாலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 10 இளைஞர்களே வெல்லவாய – எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றுள்ளனர்.
இவர்களுள் (21-22) வயதிற்கும் இடைப்பட்ட 04 இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர்.
இவர்களில் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும், சம்மாந்துறை மற்றும் சாய்ந்தமருதைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.
இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Follow on social media