வீடொன்றில் மர்மமான முறையில் 4 பேர் உயி​ரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மாலம்பே, கஹந்தோட்ட வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து தாய், மகன்மார் இருவர் மற்றும் மகள் ஒருவரின் சடலங்கள் இன்று (31) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சடலங்கள் மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குடும்பத்தின் தந்தை கடந்த 28ஆம் திகதி உயிரிழந்துள்ளதாகவும், இறுதிச் சடங்குகள் நேற்று (30) இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தற்கொலையா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Follow on social media
CALL NOW

Leave a Reply