30 ஆண்டுகளாக கழிவறையில் உணவு தயார் செய்த உணவகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் உணவகம் ஒன்று கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது.

இந்நிலையில், நகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அந்த உணவகத்தை சென்று சோதனை செய்தனர்.

30 ஆண்டுகள் பாரம்பரியமிக்க அந்த உணவகத்தில் சமோசா உள்ளிட்ட பிற பலகாரங்கள் கழிவறையில் வைத்து தயாரிக்கப்பட்டு வந்துள்ளன.

அந்த கழிவறையிலேயே மதிய உணவு உள்ளிட்ட பிற உணவுகளும் தயாரிக்கப்பட்டிருந்தது.

இதுதவிர காலாவதியான இறைச்சி மற்றும் பாலாடை கட்டி ஆகியவையும் உணவகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

அவற்றில் சில 2 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியாகி இருந்தன.

30 ஆண்டு பழமையான உணவகத்தின் பணியாளர்களுக்கு சுகாதார அட்டைகள் எதுவும் இல்லை. சட்ட விதிகளை மீறி உள்ளமை தெளிவாக அதிகாரிகளுக்கு தெரிந்துள்ளது.

இதனை தொடர்ந்து அந்த உணவகத்திற்கு சீல் வைத்துள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply