காப்பகத்தில் இருந்து 3 சிறுமிகள் தப்பி ஓட்டம் – தீவிர தேடுதலில் பொலிஸார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பாணந்துறை வாலான பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுமிகள் காப்பகத்தில் இருந்து நேற்று புதன்கிழமை (01) மூன்று சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் காப்பக பொறுப்பாளர் பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

13, 14 மற்றும் 16 வயதுடையவர்கள்
காப்பகத்தில் இருந்து தப்பிச் சென்ற சிறுமிகள் பேருவளை, பிபில மற்றும் ராகமை பிரதேசங்களைச் சேர்ந்த 13, 14 மற்றும் 16 வயதுடையவர்கள் ஆவர்.

நேற்று பகல் சிறுமிகளிடம் இருந்து கைத்தொடலைபேசி ஒன்று சிறுமிகள் காப்பக பொறுப்பாளரால் கைப்பற்றப்பட்டதாகவும், அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் சிறுமிகள் கைத்தொலைபேசியை தரையில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் தப்பியோடிய சிறுமிகளை தேடும் பணியில் பாணந்துறை தெற்கு பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply