பிறந்து 7 நாட்களேயான சிசுவை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த 21 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்துடன், மேலும் தரகர் வேலை பார்த்த வைத்தியசாலை தாதி மற்றும் அவருடைய கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் மேற்படி பெண்ணுடன் வசித்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரையும், அரசாங்க வைத்தியசாலையின் தாதி, வைத்தியசாலையின் உதவியாளர் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பாடசாலை ஆசிரியர்கள் உட்பட மேலும் பலரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மல்வத்து ஓயா ஆற்றங்கரையில் உள்ள குடிசை ஒன்றில் 40 வயதுடைய ஆண் ஒருவருடன் ஒன்றாக வசித்து வந்த கெபிட்டிகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த பெண் குழந்தையை வாஹல்கட பிரதேசத்தில் உள்ள தம்பதியருக்கு விற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. தமக்கு ஒன்றரை வயது மகனும் இருப்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
Follow on social media