தாய்லாந்து, பேங்கொக்கில் நடைபெறும் 25 வது ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை இலங்கைக்கு, கயந்திகா அபேரத்ன மற்றும் நதிஷா லேகம்கே ஆகியோர் பெற்றுக்கொடுத்துள்ளனர்.
பெண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் கயந்திகா அபேரத்ன 4 நிமிடம் 14.39 வினாடிகளில் குறித்த தூரத்தை நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இதேவேளை, பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நதீஷா லேகம்கே வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு புதிய சாதனையை படைத்துள்ளார்.
நதீஷா லேகம்கே 60.93 மீட்டர் ஈட்டியை எறிந்து குறித்த சாதனையை படைத்துள்ளார்.
Follow on social media