21ஆம் திருத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வாக 20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 19ஆவது திருத்த சட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கிய 21ஆவது திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன், இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சரவை உபகுழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

19ஆவது திருத்தச் சட்ட முன்மொழிவுகளை இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்திருந்தார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply