இந்த ஆண்டு மாத்திரம் இந்தோனேஷியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தினை குடித்து 200 அப்பாவி குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இவ் மருந்துகளில் அதிகூடிய திரப்பொருட்களான எத்திலீன், கிளைக்கோல் ஆகிய மலிவான திரவங்களை மருந்துப் பொருள் தயாரிப்புக்கு சேர்த்ததன் காரணமாக இவ் 200 குழந்தைகளின் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.
அதாவது மருந்து பொருள் தயாரிப்புக்கு கிளிசரினுக்கு மாற்றாக இந்த மலிவான திரவங்கள் உட்சேர்சக்கப்பட்டதனால் இந்ந கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உயிரழந்த குடும்பங்களின் பெற்றோர்கள் குறித்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக 10 பில்லியன் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்ததுடன்.
இந்தோனேஷிய சுகாதார அமைப்பு பல மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளதுடன், உலக சுகாதார தாபணத்துடன் இனைந்து ஆய்வு நடிவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன். இச் சம்பவம் தொடர்பாக இன்னும் பல குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow on social media