18 வயதான காதலனை கடத்திய 17 வயது பெண் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

முச்சக்கரவண்டியில் 18 வயது இளைஞனைக் கடத்திச் சென்ற சந்தேகத்தின் பேரில் 17 வயதுடைய இளைஞனின் காதலி மற்றும் அவரது தந்தையை அகலவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் (16) பிற்பகல் மஹகம பொலேகொட பிரதேசத்தில் வசிக்கும் இந்த இளைஞன் முச்சக்கரவண்டி பழுதுபார்ப்பதற்காகச் சென்ற வேளை அவர் தாக்கப்பட்டுக் கடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட போது இந்த இளைஞன் அவரது காதலியின் வீட்டில் இருப்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இந்த இளைஞனை பொலிஸார் மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதுடன் இளைஞனின் காதலி மற்றும் அவரது தந்தை நேற்று (17) மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்

Follow on social media
CALL NOW

Leave a Reply