எல்ல பாதுகாப்பு வனப்பகுதிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் 16 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்ல வனப்பகுதியில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பதுளை, ஹாலிஎல மற்றும் நமுனுகுல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை,எல்ல வனப்பகுதியை பார்வையிட வரும் சிலர் குறித்த பிரதேசத்தை அழித்து வருவதாக எல்ல பிரதேச சபையின் தலைவர் மாலக பிரபாத் குறிப்பிட்டுள்ளார்.
Follow on social media