அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 15 வயதுடைய சிறுமியிடம் பாலியல் சேஷ்டை புரிந்ததாக கூறப்படும் மாமா முறை உறவினர் ஒருவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்
அட்டாளைச்சேனையில் பெற்றாரின் பாதுகாப்பில் இருந்த 15 வயதுடைய சிறுமியிடம் 36 வயதுடைய மாமா முறை உறவினர் தொடர்சியாக மூன்று மாதங்களாக பாலியல் சேஷ்டை புரிந்து வந்துள்ளார் .
இதனால் விரக்தியடைந்த சிறுமி தற்கொலை செய்யும் எண்ணத்தில் மாத்திரைகளை உட்கொண்டுள்ளார் . சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் சிறுவர் துஸ்பிரயோக இலக்கமான 1929 அழைத்து முறையிட்டதன் பின்னர் அக்கரைப்பற்று பொலிஸார் சிறுமியிடம் விசாரணை செய்து சந்தேக நபரை கைது செய்தனர் .
இன்று சந்தேக நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்படுத்திய போது , சந்தேக நபரை விசாரணை முடியாத காரணத்தினால் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா உத்தரவிட்டுள்ளார்
சமூக வலைத்தளங்கள்