பேருந்து விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தாய்லாந்தின் பிரச்சாப் கிரி கான் மாகாணத்தில் திங்கட்கிழமை(04) நள்ளிரவில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. பின்னர் சிறிது நேரத்தில் சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி இரண்டாக பிளந்ததுள்ளது.

தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த கோர விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந் நாட்டு அரசு போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting