அப்பாறையில் 11 வயது சிறுமியை சீரழித்த இரு காவாலிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத்தில் உள்ள 11 வயது சிறுமி ஆயிஷா (சட்டரீதியான காரணம் கருதி பெயர் மாற்றி எழுதப்பட்டுள்ளது.) 2022.05.23 இரவு ஆயிஷா தனது குடும்பத்துடன் அட்டாளைச்சேனை கடற்கரைக்கு செல்கிறாள்.

ஆயிஷாவின் மூத்த சகோதரி இடைநடுவே வீடு செல்ல நேரிட்டதால் ஏனைய உறவினர்கள் கடற்கரையில் வீற்றிருக்க விளையாடிக் கொண்டிருந்த ஆயிஷா அழைக்கப்பட்டு தனது சகோதரிக்கு பாதுகாப்பாக அவளுடன் வீட்டுக்கு அனுப்பப்படுகிறாள்.

தனது சகோதரியை வீட்டில் விட்டுவிட்டு இன்னும் பருவம் எய்தாத அந்த 11 வயது சிறுமி தனிமையாக மீண்டும் கடற்கரைக்கு செல்கிறாள்.

அப்போது இரவு 10.30 மணி இருக்கும். கடற்கரைக்கு சென்று கொண்டிருந்த ஆயிஷா வழியில் இரண்டு காவலிகளால் இடைமறிக்கப்பட்டு வாயை கையினால் பொத்தி அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு தூக்கிச் செல்லப் படுகிறாள்.

அங்கு ஒரு காவாலி வெளியில் காவல் இருக்க மற்றய காவாலி அந்து பிஞ்சு உடம்பை துவம்சம் செய்திருக்கிறான். இடையே அந்த காவாலியின் தாய் உள்வரும் சப்தம் கேட்டு அந்த குழந்தையை மிரட்டி யாரிடமும் சொல்ல வேண்டாம், மீண்டும் கூப்பிட்டால் வர வேண்டும் என்று கூறி மதிளுக்கு மேலால் அவளை வெளியே தூக்கிப் போட்டு விட்டார்கள்.

இது தற்சமயம் எனது கண்காணிப்பின் கீழ் விசாரணை மற்றும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள ஒரு குழந்தை.

சம்பவத்தில் ஈடுபட்டுள்ள இரு காவாலிகளும் ஆயிஷாவின் உறவுக்கார காவாலிகள். பொலிஸின் தேடுதலில் இன்னும் அந்த காவலிகள் அகப்படவில்லை.

அட்டுளுகமை ஆயிஷா தொடர்பான பதிவுகள் முகப்புத்தகம் முழுக்க பரவி உள்ளதால் இதையும் எமது சமூகம் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப்பதிவு.

Follow on social media
CALL NOW Premium Web Hosting