100 அடி ஆழ திடீர் பள்ளம் – ஆங்கிலேயர் காலத்து தங்க சுரங்கமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அத்திக்குன்னா பகுதியில் தனியார் தேயிலை தோட்ட குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென பூமி உள்வாங்கியது.

கிணறு வடிவில் சுமார் 30 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேலும், இந்த திடீர் பள்ளம் குறித்து, வருவாய், புவியியல் மற்றும் சுரங்கத் துறையினர் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அப்பகுதியை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், 30 அடி ஆழத்துக்கு ஏற்பட்ட பள்ளம், தற்போது 100 அடி ஆழ பள்ளமாக மாறி இருக்கிறது. இதனால், பாதுகாப்பு கருதி பூமி உள்வாங்கிய பகுதிக்கு அருகில் இருந்த தொழிலாளர்களின் குடியிருப்புகள் காலி செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு வேறு பகுதியில் தங்குவதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பூமி உள்வாங்கிய பகுதியில், ஆங்கிலேயர் காலத்து தங்க சுரங்கங்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இதன் காரணமாக பூமி உள்வாங்கி இருக்கலாம் என்று சந்தேகித்த அதிகாரிகள், ஆய்வுப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply