10 நிமிடங்களில் 5 லட்சம் பார்வையாளர்கள்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகின்றன.

சமீபத்தில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

நேற்று மாலை 6 மணிக்கு முதல் பாடலான அரபிக் குத்து பாடல் வெளியானது.

பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். அனிருத், ஜோனிட்டா காந்தி பாடியுள்ளனர்.

பாடல் வெளியான 10 நிமிடங்களில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்தது.

விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.

Follow on social media

Leave a Reply