ஹட்டனில் நகரசபை உறுப்பினர் உட்பட நால்வருக்கு கொரோனா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஹட்டன் டிக்கோயா நகரசபை உறுப்பினர் ஒருவர் உட்பட நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

இன்று (03) காலை வெளியாகிய பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையில் ஏற்கனவே தொற்றுக்குள்ளான அக்கரபத்தனை பிரதேச சபை தலைவருடன் தொடர்பை பேணிய நிலையில் தொற்றுக்குள்ளான ஹட்டன் டிக்கோயா நகரசபையின் உறுப்பினர் ஒருவரின் மகளும், தொற்றாளரும் சென்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டதால் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஹட்டன் டிக்கோயா நகரசபை 08 உறுப்பினர்களில் ஒருவருக்கும், டிக்கோயா தரவலையில் பெண் ஒருவரும், ஹட்டன் மல்லியப்பு பகுதியில் ஆண் ஒருவருமாக நால்வருகே தொற்று உறுதியாகியது உள்ளது.

இவர்களை சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபை பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply