விஜய் படத்தில் நடிக்கிறாரா மோகன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் அறிமுகமாகி, 1980-களில் முன்னணி கதாநாயகனாக கொடி கட்டி பறந்தவர் மோகன்.

இவர் 15 வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு விலகினார். புதிய படங்களில் நடிக்க வைக்க அழைப்புகள் வந்தும் மறுத்து வந்தார். தற்போது, இயக்குனர் விஜய் ஸ்ரீ சொன்ன ஹரா படத்தின் கதை பிடித்ததால் அந்த படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் நடிக்கும் 66-வது படத்தில் அவருக்கு அண்ணனாக மோகன் நடிக்க உள்ளதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து மோகனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, விஜய் படத்தில் நடிக்கவில்லை என்று மறுத்தார். ஹரா படத்தில் நடித்து முடித்த பிறகே, அடுத்த படத்தில் நடிப்பது குறித்து யோசிப்பேன் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து கதாநாயகனாக மட்டுமே நடிக்க மோகன் முடிவு செய்து இருக்கிறார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply