வவுனியா – மன்னார் வீதியில் விபத்து – இருவர் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வவுனியா – மன்னார் வீதியில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (22) பிற்பகல் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குருமன்காடு பகுதியில் இருந்து மன்னார் வீதி வழியாக மோட்டர் சைக்கிள் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த போது உக்குளாங்குளம் பகுதியில் இருந்து மாதா சொரூப வீதி ஊடாக மன்னார் வீதிக்கு முச்சக்கர வண்டி ஒன்று ஏற முற்பட்ட போது இரு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி வீதியை விட:டு விலகின.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிள் சாரதி மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply